உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


imagesமுறுகல் தோசை

தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி – 2 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம்பருப்பு – 1 /2 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு
மஞ்சள்தூள் -சிறிதளவு
தண்ணீர் – தேவையானளவு

செய்முறை
(பாத்திரம் ஒன்றில் புழுங்கல்அரிசி,பச்சையரிசி,
தண்ணீர் ஆகியவற்றை கலந்து இரண்டு மணித்
தியாலம் ஊற வைக்கவும்.

இன்னொருபாத்திரத்தில் உளுத்தம்பருப்பு,வெந்தயம்,
தண்ணீர் ஆகியவற்றை கலந்து 15நிமிடங்கள் ஊற
வைக்கவும்.

இவையாவும் ஊறியபின்பு ஊறிய உளுத்தம் பருப்பு,
வெந்தயம்,தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில்
(மிக்ஸியில்) போட்டு பொங்க பொங்க அரைக்கவும்.

அரைத்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போடவும்.

பின்பு ஊறவைத்த புழுங்கல்அரிசி,பச்சரிசி,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து கிரைண்டரில் (மிக்ஸியில்)
போட்டு நைசாக அரைக்கவும்.

பின்பு அதை எடுத்து முதலில் வெந்தயம் உளுந்து
அரைத்து போட்டு வைத்துள்ளபாத்திரத்தில் போடவும்.

பின்பு அரைத்து பாத்திரத்தில் போட்டு வைத்திருக்கும்
யாவற்றையும் புளிக்கவைக்கவும்.

அடுத்த நாள் உப்பு,மஞ்சள்தூள் போட்டு நன்றாக
கலக்கவும்.

அதன்பின்பு அடுப்பில் தோசைக்கல்லை
வைத்து சூடாக்கவும்.

தோசைக்கல்சூடானதும் ஒருதுணியில்
(அல்லது ஒரு சிறிய உருளைக்கிழங்கினை பாதியாக
வெட்டி அதன்தோல்பாகத்தில் முள்ளுக்கரண்டியை
செருகவும் )சிறிதளவு நல்லெண்ணையில் தோய்த்து
எடுத்து அதை அதனை தோசைக்கல்லில் தடவும்.

அதன் பின்பு கரைத்து புளிக்கவைத்துள்ள மாவில்
ஒரு குழிக்கரண்டி எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி
அதனை நன்றாக கரண்டியால் தடவி தோசையை
வேகவிடவும்.

ஒரு பக்கம் வெந்த பின்பு அதை திருப்பி போட்டுவேக
விடவும்.

தோசையின் இரு பக்கமும் நன்றாக வெந்தபின்பு அதை
எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு சுவையான சத்தான முறுகல் தோசை
தயாராகிவிடும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்