Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வேகத் தடுப்பு பழுதடைந்த நிலையில் பாதை விலகிச் சென்ற டிரக் வண்டியொன்று ஒரு சில அங்குலத்தில் மலை உச்சியில் தொங்கிக்கொண்டிருந்ததால், அந்த டிரக் வண்டியின் சாரதி உயிர் தப்பிய அதிசய சம்பவம் தென்மேற்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது.

கிங்ஷென் பிராந்தியத்தில் பாதை விலகிச்சென்ற டிரக் வண்டி மலை உச்சியிலிருந்து பாதாளத்தை நோக்கி வழுக்கிச் சென்றவேளை, தான் ஒரு சில கணங்களில் உயிரிழப்பது நிச்சயம் என மேற்படி சாரதி நினைத்துள்ளார்.

ஆனால் டிரக் வண்டியின் பெரும் பகுதி மலை உச்சியை விட்டு விலகி பாதாளத்தை நோக்கிச் சென்றவேளை, அதன் பிற்பகுதி பாறை ஒன்றில் சிக்கிக் கொண்டதில் டிரக் வண்டி அந்தரத்தில் தொங்கியது.

இந்நிலையில், டிரக் வண்டி 400 அடி ஆழமான பாதாளத்தில் விழுவதற்கு முன்பு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு டிரக் வண்டியின் சாரதியை பாதுகாப்பாக மீட்டனர்.

சாரதி தான் அசைந்தால் டிரக் வண்டி பாதாளத்தில் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மீட்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முதலில் மறுத்ததாகவும் மிகுந்த சிரமப்பட்டே அவரின் ஒத்துழைப்பை பெற நேர்ந்ததாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

சாரதியை மீட்ட ஒரு சில நிமிடங்களில் டிரக் வண்டி பாதாளத்தில் விழுந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்