உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Unavngivetபனிப்புலம் அம்பாள் சனசமுக நிலைய முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்துகின்ற முன்பள்ளிச் சிறார்களுக்கான விளையாட்டு விழாவிற்கு நிதியுதவி கோரல்.

கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுவந்த பனிப்புலம் அம்பாள் சனசமுக நிலைய முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்துகின்ற முன்பள்ளிச் சிறார்களுக்கான விளையாட்டு விழா கடந்த இரண்டு வருடங்களாகப் பல்வேறு தடங்கல்கள் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் அவ் ஆண்டுகளில் முன்பள்ளிகளில் கல்வி கற்ற எமது ஊர்ச் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டி தொடர்பான அறிமுகமும், எமது ஊரின் ஏனைய சிறுவர்களுடன் சகயமாகப் பழகி உறவை வளர்ப்பதற்கான வாய்ப்பும் கிடைக்காமல் போனது.

அத்துடன் எமது கிராமத்தின் வசதி வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்ற பெற்றார்களின் பிள்ளைகள் வெளிப் பாலர் பாடசாலைகளுக்குச் சென்று, அவர்கள் அங்கு பல்வேறு விளையாட்டு, கலை நிகழ்வுகளில் பங்குகொள்கின்றனர்.

ஆனால், எமது கிராமத்தின் 40க்கு மேற்பட்ட ஏழைச் சிறுவர்கள் இம் முன்பள்ளிகளில் தொடர்ந்தும் கற்று வருகின்றனர்.

எனவே எமது ஊரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்ற எமது குழந்தைகளை ஆற்றலும், ஆளுமையுமுள்ளவர்களாக வளர்த்தெடுக்கவேண்டியது ஊரவர் ஒவ்வொருவரினதும் கடமையும் கட்டாய பொறுப்புமாகும்.

எனவே இவ்வாண்டுக்கான சிறுவர் விளையாட்டு விழாவைச் சிறப்புற நடத்துவதற்கு ஊரவரதும், புலம்பெயர் உறவுகளினதும் புரண ஒத்துழைப்பையும் பங்களிப்பினையும் வேண்டிநிற்கின்றோம்.

இவ்விளையாட்டு விழாவுக்கான உத்தேச மதிப்பீடு :

ஏற்பாட்டுக்கான செலவுகள் = ரூபா 10 000/=

பரிசுப் பொருட்கள் = ரூபா 20 000/=

மேலதிக விபரங்களுக்கு – தனூட் (மறுமலர்ச்சி மன்றம்), ஜெயகாந்தன் (அம்பாள் சனசமூக நிலையம்)

– மறுமலர்ச்சி மன்றம், அம்பாள் சனசமூக நிலையம்.

                                                                                                                                                         Saba Thanu

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்