உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇலங்கையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று அவசியம் இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது. அதில் வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் செய்தி ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள தேர்தல்கள் ஆணையாளர் தமது கடமையை சிறப்பாக முன்னெத்து வருகின்றார்.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு என சுயாதீன ஆணைக்குழு ஒன்று அவசியமில்லை.

எனவே ஆணைக்குழு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்று தாம் கருதவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்