உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesCAT3IYV5எங்கள் மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளுக்குச் செல்ல வேண்டும் இதற்காக சர்வதேச நீதிமன்றம் வரை செல்வோம். அதற்குரிய நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற காணி சுவீகரிப்பைத் தடுப்பது தொடர்பான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு பிரதேச சபைக்கும் தமது பிரதேசத்திலுள்ள மக்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். காணி சுவீகரிப்புக்கு எதிரான வாழ்வுரிமைக்கான எமது போராட்டம் தொடர்பில் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

நாங்கள் எங்கள் போராட்டங்களை மேற்கொள்வதற்கு பிரதேச ரீதியாக கட்சிக்கு அப்பால் சிவில் சமூகக் குழுக்களையும் உள்வாங்க வேண்டும். இதன் மூலம் நாங்கள் தொடர் போராட்டமாக மாவட்ட செயலகத்தை முடக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம்என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிக்கையில் ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்தை விட இப்போதுதான் நாங்கள் அதிக அழுத்தத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் ஒவ்வொருவரும் ஆகக் குறைந்தது ஐந்து பேரை யாவது திரட்டிப் போராட வேண்டும். எங்கள் இனம் திட்ட மிட்ட முறையில் அழிக்கப் படுகின்றதுஎன்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்