Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கிளிநொச்சி தொண்டமான் நகர் உதிரவேங்கை வைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த விக்கிரகங்கள் மற்றும் ஆலயப் பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றுள்ளது. ஆலயத்தில் இருந்த விக்கிரகங்களுடன் ஐம்பொன் தகடுகள், பெறுமதியான பொருள்கள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த சூறையாடல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த விக்கிரகங்கள், பொருள்கள் சூறையாடப்பட்ட இந்தச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலயத்துக்குச் சொந்தமான காணி அதிகாரிகளின் அனுமதியுடன் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டு அங்கு கட்டடப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திட்டமிட்டு இந்த ஆலயம் சூறையாடப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்