தமிழில் எழுத
பிரிவுகள்


untitledதமிழக அரசின் தீர்மானம், முதலமைச்சரின் கடிதம் ஆகியவற்றை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. இலங்கை தமிழர்களை மத்திய அரசு கைவிட்டு விட்டது என்று திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கச்சத்தீவை திரும்ப பெறும்வரை மீனவர்களின் பிரச்சனை தீராது. எனவே, மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் தீர்மானம், முதலமைச்சரின் கடிதம் ஆகியவற்றை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. இலங்கை தமிழர்களை மத்திய அரசு கைவிட்டு விட்டது. இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது என்று கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் கூறுகின்றன. அத்துடன் மத்திய மந்திரி ஜி.கே.வாசனும் கூடாது என்கிறார்.

ஆனால், மத்திய அரசு எந்த கருத்தும் சொல்லவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு பாதகம் இல்லாமல் இந்தியா செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்