Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யாழ் மாவட்டப்பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மாதகல் சென்யோசேப் மகா வித்தியாலயம் தொடர்ந்து மூன்றாவது வருடமாக மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று இடம் பெற்ற இறுதிப்போட்டியில் கரவெட்டி விக்கிணேஸ்வராக் கல்லூரியும் மாதகல் சென்யோசேப் மகா வித்தியாலயமும் மோதிக் கொண்டன.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் பெற எடுத்த முயற்சிகள் கை கூடாத நிலையில் முதல் பாதி போட்டி சம நிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் புதிய உற்சாகத்துடன் களமிறங்கிய இரு அணிகளும் களத்தில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தத் தொடங்கிய நிலையில் முதலாவது கோலை ஐந்தாவது நிமிடத்தில் சென்யோசேப் மகா வித்தியாலய முன்னனி விராங்கனை றோஸ் மோ தனது அணிக்காக பெற்றுக் கொண்டார்.

போட்டிமிகவும் சூடு பிடித்ததைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டபோதிலும் மீண்டும் ஒரு கோலை சென்யோசேப் மகா வித்தியாலயய வீராங்கனை அனற் பதினொறாவது நிமிடத்தில் பெற்று அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து இரு அணிகளும் கோல் பெற எடுத்த முயற்சிகள் கைகூடாத நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

ஆட்ட நிறைவில் மாதகல் சென்யோசேப் மகா வித்தியாலயம் 02 க்கு 00 என்ற கோல் கணக்கில் கரவெடடி விக்கிணேஸ்வராக் கல்லூரியை வெற்றி பெற்று யாழ் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்