தமிழில் எழுத
பிரிவுகள்


imagesCAEZLVK6தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

டெலோ முதல்வர் எம். கே சிவாஜிலிங்கம் இந்த தகவலை இலங்கையின் உள்ளூர் வானொலிக்கு ஒன்று மூலம் வெளியிட்டுள்ளார்.

கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பில் ஏற்கனவே தமிழரசுக் கட்சியை தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகள் மத்தியில் இணக்கம் ஏற்பட்டது. எனினும், தமிழரசுக்கட்சி மாத்திரம் அதில் பின்னடிப்பை காட்டிவந்தது.

இந்தநிலையில் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் முயற்சியில் அரசியல் கட்சி பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் அடிப்படையில் நேற்று டெலோவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் அரசியல் கட்சியாக பதிவுசெய்ய கொள்கை இணக்கம் ஏற்பட்டதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இன்று மன்னார் ஆயருடன் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் நடத்தும் சந்திப்பின்போது கூட்டமைப்பின் பதிவு என்ற விடயம் பெரும்பாலும் உறுதி செய்யப்படலாம் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்