தமிழில் எழுத
பிரிவுகள்


ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை குறித்த அறிக்கை தீவிரமாக ஆராயப்பட்டது என அமைப்பின் பிரதி பொதுச் செயலாளர் ஜேன் எலிசன் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் இடம்பெற்றது போன்ற சூழ்நிலைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்கக் கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரேஸ்ட பிரதிநிதிகளினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் உன்னிப்பக கவனிக்கப்பட்டதாகவும், பரிந்துரைகள் எதிர்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை குறித்த இறுதி பரிந்துரை அறிக்கை வெளியிடப்படும் எனவும், உள்ளடக்கங்களை தீவிரமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்