உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


imagesCABAT2TEமோசடி மன்னன் பவர் ஸ்டார் சீனிவாசனின் பெண் கூட்டாளி வெங்கடம்மா உட்பட 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெரும் மோசடி வழக்கில் சிக்கி பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடுத்தடுத்து வழக்குகளும், புகார்களும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்ட இருவரை பொலிஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பவருக்கு புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பெண், பெயர் வெங்கடம்மா, 46 வயதுப் பெண் இவர். இன்னொருவர் 45 வயதான கிருஷ்ணசாமி. இருவரும் தி.நகரைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் தி.நகரில் ஒரு ஆபீஸ் போட்டுள்ளனர். கடனுக்காக அலைபவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பவரிடம் கூட்டி வந்து மோசடி செய்வதே இவர்களது தொழில். இப்படி ஆள் கூட்டி வருவதற்காக பவரிடமிருந்து இருவரும் கமிஷன் பெற்று வந்துள்ளனர்.

இவர்களின் கைது குறித்து சென்னை குற்றப் பிரிவு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெங்கம்மா என்ற லட்சுமிக்கு சொந்த ஊர் ஆந்திரா மாநிலமாகும். இவர் தெலுங்கு தெரிந்தவர்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவதில் கெட்டிக்காரி.

கிருஷ்ணசாமி, கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

இவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய புரோக்கராக செயல்பட்டுள்ளார். இவர், மலேசியாவை சேர்ந்த மணியம் என்பரை 2010-ம் ஆண்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

அப்போது மணியத்துக்கு ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.2.50 கோடியை சீனிவாசன் ஏமற்றியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள வெங்கம்மாவும், கிருஷ்ணசாமியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 2 பேரும் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய கூட்டாளிகள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்