Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



1059915151Mannar-Bishop2தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய அரசியல் தீர்வு சம்பந்தமாக பொது நிலைப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பாக வரைபொன்றை மேற்கொள்ள குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக இடம் பெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் ஆயர் அவர்களின் அழைப்பை ஏற்று தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளின் பிரதி நிதிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பிரதி நிதிகளும் இணைந்து மன்னார் கீரி ஞானோதையத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன அழிப்பை எதிர்கொள்வது குறித்து ஆராயப்பட்டது.

மேலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய அரசியல் தீர்வு சம்பந்தமாக பொது நிலைப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பாக வரைபொன்றை மேற்கொள்ள குழுவொன்று உருவாக்கப்பட்டது.

இந்த விடையங்கள் தொடர்பாக விரைவில் மீண்டும் கூடி கலந்துரையாடுவது என முடிவெடுக்கப்பட்டது.”

இங்கு கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன்,

“இந்த தருணத்தில் சமரசமாக எல்லோறும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஓர் அங்கத்து வக்கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) பல முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

தமிழிழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் முயற்சிகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் தமது பரிபூரணமான ஒத்துழைப்பை தந்து இந்த விடையம் தொடர்பாக சமரசமாக ஒரு முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

குறித்த கலந்தரையாடலில் தற்போது தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு பாரதூரமான பிரச்சினைகள், இனப்படுகொலைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த விடையம் சம்மந்தமாக தமிழ் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் சிவில் அமைப்பு, பொதுமக்கள் ஆகியோரை ஒற்றுமைப்படுத்தி இவ்விடையத்தை எவ்வாறு கையாள்வது தொடர்பில் முடிவெடுத்து அவை நிறைவேற்றப்பட வேண்டும்.”

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்