உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledகச்சதீவு விவகாரத்தில் மறு பரிசீலனை செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை சென்ற, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்திய இலங்கை, ஒப்பந்த அடிப்படையில், கச்சதீவு, இலங்கையிடம் வழங்கப்பட் டது. எனினும் அங்கு இடம்பெறும் விழாவில், இந்தியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்திய மீனவர்கள், மீன்பிடிக்க செல்லும் போது, கச்சதீவில் ஓய்வெடுக்க, மீன் வலைகளை உலர வைக்க, அனுமதி உள்ளது. எனினும், சமீப காலமாக, இந்த ஒப்பந்தம் மீறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கச்சதீவை இலங்கையிடம் இருந்து திரும்பப்பெற, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதியும், கச்சதீவை மீட்க, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

தமிழக மக்களின் ஒருமித்த கருத்தை அடுத்து, கச்சதீவு விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

இந்திய மீனவர்கள், மீன்பிடிக்க செல்லும்போது, கச்சதீவில் ஓய்வெடுக்க, மீன் வலைகளை உலர வைக்க, அனுமதி உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்