உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தங்களது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு எந்தத் தடையும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு மே 18 ம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தங்களது உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும்,தாயகப் பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தல்கள் ஏதும் விடுக்கப்படலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த எந்தத் தடையும் இல்லை. அவர்கள் வழிபாடு செய்ய முடியும். அதற்கு இராணுவத்தினர் எந்த வகையிலும் தடையாக இருக்கமாட்டார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்