உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


train_injured_002நியூயார்க் நகரில் தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்ற ரயில் மீது எதிரே வந்த ரயில் மோதியதில் 60 பேர் படுகாயமடைந்தனர்.
நியூயார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து நியூ ஹேவன் நோக்கி நேற்று மாலை அதிவேக மின்சார ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயிலில் சுமார் 250 பயணிகள் இருந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கனெக்டிக்கட் அருகேயுள்ள பிரிட்ஜ்போர்ட் பகுதியில் ரயில் சென்ற போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தை விட்டு விலகி சாய்ந்தது.

அப்போது எதிர்திசையில் இருந்து வேகமாக வந்த மற்றொரு ரயில், சாய்ந்து நின்ற ரயிலின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் 60 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்தினால் நியூயார்க் – பொஸ்டன் நகருக்கிடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்