Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நடிகர் விஷால் தற்போது சொந்த பட நிறுவனம் தொடங்கி ‘பாண்டிய நாடு‘ என்ற படத்தை தயாரிப்பதுடன் ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியது:

என்னை ரசிகர்கள் மதுரைக்காரன் என்றே கூறுகிறார்கள். அது எனக்கு பிடித்திருக்கிறது. இந்நிலையில்தான் இயக்குனர் சுசீந்திரன் என்னிடம் ‘பாண்டிய நாடு’ கதையை சொன்னார்.

மதுரைக்காரன் என்று என்னை அழைப்பதற்கும் இந்த பட டைட்டிலுக்கும் பொருத்தமாக இருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன். அத்துடன் படத்தை நானே தயாரிக்கிறேன்.

லட்சுமி மேனன் ஹீரோயின். பாரதிராஜா, சூரி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு. வைரமுத்து பாடல்களுக்கு டி.இமான் இசை. பாஸ்கர் சக்தி வசனம்.

நடிகை ஒருவர் என்னை காதலிப்பதாக கூறுகிறாரே என்று கேட்கிறார்கள். என்னை காதலிப்பவர்களை நான் தடுக்க முடியாது.

தற்போது நல்ல படங்களில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ரிலீஸ் ஆகும் படங்களில் வெற்றி பெறும் படங்களை பார்க்கிறேன்.

அந்த வெற்றி, என்னையும் அதுபோல் படங்கள் எடுக்கவும், நடிக்கவும் தூண்டுகிறது. இவ்வாறு விஷால் கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்