Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesமின்கட்டண உயர்வை வாபஸ் பெறுமாறு அரசைக் கடுமையாக வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டத்தில் 700 தொழிற்சங்கங்கள் பங்கேற்பதுடன், நாடு முழுவதும் அரச எதிர்ப்புப் பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.

இதற்கமைய தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில், பொது எதிர்க்கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெறும் பிரதான பேரணி இரத்மலானை வெலிக்கடையில் இன்று மு.ப. 10 மணிக்கு ஆரம்பமாகி கல்கிஸை வரை செல்லும்.

அத்துடன், இன்று விஸ்வரூபமெடுக்கும் இந்தப் போராட்டம் நாளைமுதல் புதிய பரிமாணத்துடன் நாடுமுழுவதும் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தொழிற்சங்கங்களின் இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு ஆளுந்தரப்பு தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கத் தயாராக உள்ள நிலையில், அரச உயர்மட்டம் அவற்றுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது என்றும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டின.

இந்த வேலை நிறுத்தத்துக்கு யாழ். பல்கலைக்கழக ஆசிரிய சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 10 மணி முதல் ஒரு மணிநேர கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதுடன் பல்கலைக்கழக ஆசிரியர்களும் விரிவுரைகளை பகிஷ்கரிப்பர் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரன் தெரிவித்தார்.

இன்று விஸ்வரூபமெடுக்கும் இந்தப் போராட்டம் நாளை முதல் புதிய பரிமாணத்துடன் நாடுமுழுவதும் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்