உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesCAWWF3R8கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கட்சியின் தலைவரும் தமிழ்க்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வடமாகாணசபை தேர்லை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவித்ததும் அதுபற்றி முடிவெடுப்பதற்கு தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டம் சனிக்கிழமை காலைவேளையில் ஆரம்பமாகி மாலை 6 மணிவரையும் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்தியக்குழு அங்கத்தவர்களுக்கு இடையே பலத்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல் திணைக்களத்தில் தனிக் கட்சியாக பதிவு செய்வது, மீளகுடியேற்றப் பிரதேசங்களில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்;த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்,

இராணுவ தேவைக்காகக் அரசாங்கம்,பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்துவது, இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வது, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள குடும்பங்கள் தாயகம் திரும்பி மீள்குடியேறுவது தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுக்கள் நடத்துவது, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்த நடவடிக்கைகள், அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் தீர்வு யோசனைகள் போன்றவை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இங்கு விரிவாக பேசப்பட்டது.

வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அரசாங்கம் அறிவிக்கும்போது, தாங்களும் அதுபற்றி முடிவெடுப்பது என்றும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் பல விடயங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், அவற்றுக்கு தாங்கள் உரிய விளக்கம் அளித்ததாகவும் மாவை சேனாதிராஜா எம்.பி மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர் சிற்றம்பலத்திற்கும் இடையில் பலத்த வாக்குவாதம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்