Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesCA3AXJE9சீனாவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் நீதவான் குழாமிலிருந்து இலங்கை நீதவான் ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த கிறிஸ் பின்டோ என்ற நீதவானே இவ்வாறு விசாரணைக் குழுவிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

சீன அரசாங்கம் அத்து மீறிச் செயற்பட்டு வருவதாக, பிலிப்பைன்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

வளங்கள் கொழிக்கும் தென் சீனக் கடற்பரப்பில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமது மனைவி ஓர் பிலிப்பைன்ஸ் பிரஜை என்ற காரணத்தினால் வழக்கு விசாரணைகளில் நீதவானாக கடயைமாற்றுவது பொருந்தாது என நீதவான் பின்டோ, ஐக்கிய நாடுகள் நீதவான் குழாமிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதவான் வழக்கு விசாரணைகளிலிருந்து விலகிக் கொண்டமை விசாரணைகளை பாதிக்காது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்