உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledகொழும்பில் வர்த்தகர் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் சிறிலங்கா பொலிஸின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் பம்பலப்பிட்டிப் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட முகமட் சியாம் என்ற வர்த்தகர், கடந்த மே 22ஆம் திகதி தொம்பே பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரண்டாவது தடவையாகவும் விசாரிக்கப்பட்டதை அடுத்தே பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன நேற்றுமாலை கைது செய்யப்பட்டார்.

இந்த ஒப்பந்தக் கொலை தொடர்பாக ஏற்கனவே, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று சிறிலங்கா பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

இவரைக் கொலை செய்வதற்கு 35 வயதான சக வர்த்தகர் ஒருவரே சிறிலங்கா பொலிஸாருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தக் கொலைக்காக 3 மில்லியன் ரூபா பேரம் பேசப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்