உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesCAV4TMHBஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இடையே 1987ல் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்துவது தொடர்பான மாநாடு டில்லியில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

உலக மேம்பாட்டு மனித உரிமைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் உள்பட எட்டு இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்கள், புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை தமிழ் எம்பிக்கள், இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் தலைவர்கள் மாநாடு-2013´ என்ற இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய அரசிடம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகாரங்களை குறைப்பதற்கு ஆதரவளிக்க முடியாது: தெரிவுக்குழு குறித்து எம்.ஏ.சுமந்திரன் பா.உ.

அதிகாரங்கள் குறைக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கோ செயற்பாட்டுக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் துணைபோகாது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆராயப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும் அது குறித்த உத்தியோகபூர்வ அழைப்பிதழ் எதுவும் கூட்டமைப்பிற்கு கிடைக்கவில்லை என்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் ஆளும் தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

பொலிஸ் மற்றும் காணி உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் சிலவற்றை சவாலுக்கு உட்படுத்தி அவற்றை பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் திருத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மேற்படி தெரிவுக்குழு தொடர்பில் எவ்விதமான தகவல்களும் எமக்கு அறிவிக்கப்படவில்லை.

அதேபோன்று மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கவும் போவதில்லை என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்