Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் யுவராஜா இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் படத்தை தயாரித்து வருகிறது. பல வருடங்களதக வனவாசமிருக்கும் வடிவேலுக்கு இது பிரமாண்டமான ரீஎன்ட்ரி.

இவ்வளவு நாள் படம் இல்லாமல் பந்தாடப்பட்டவர் ஓரளவு அடக்கத்தை கற்றிருப்பார் என நினைத்தனர். ஆனால் இயக்குனரின் வேலையில் இஷ்டத்துக்கு மூக்கை நுழைத்து ஒட்டு மொத்த யூனிட்டின் இரிட்டேஷனை பெற்றிருக்கிறார் காமெடிப் புயல்.

படம் தொடங்கிய முதல்நாளில் தொடங்கிய இந்தப் புகைச்சல் இப்போது தீயாக பரவியிருக்கிறது. அவரை வைத்து இனியும் மாரடிக்க முடியாது என்ற நிலையில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் இருவரும் பாய்காட் செய்ய, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமாதானம் பேசி படப்பிடிப்பை தொடர்வதா இல்லை எடுத்தவரைக்கும் நஷ்டம் என படத்தை ட்ராப் செய்வதா…? ஏஜிஎஸ் ஏரியாவில் பெரும் குழப்பம் நிலவுகிறதாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்