உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledசிங்கப்பூரை சேர்ந்த 316 மீட்டர் நீள சரக்கு கப்பல் சவுதி அரேபியாவில் இருந்து 4 ஆயிரத்து 500 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு அரபிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.

மும்பை கடற்பகுதியில் இருந்து 840 கடல் மைல் தூரத்தில் வந்த போது திடீரென்று நடுப்பகுதியில் முறிவு ஏற்பட்டு கப்பல் 2 ஆக பிளந்தது. கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் மூழ்கத் தொடங்கின. கப்பல் ஊழியர்கள் செய்வதறியாது நடுக்கடலில் தத்தளித்தனர்.

சம்பவம் பற்றி அறிந்த மும்பை கடலோர காவல் படையினர் விரைந்து சென்று கப்பல் ஊழியர்கள் 26 பேரையும் உயிருடன் மீட்டனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன? கண்டெய்னர்களில் என்ன உள்ளது? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்