உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்புதுக்கோட்டை அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் 9 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.

புதுகோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் வல்லதிராகோட்டை அரசுப் பள்ளி உள்ளது.

பள்ளிக்கு செல்வதற்காக இன்று காலை 12 குழந்தைகள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வளநாடு என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும் விபத்தில் காயம் அடைந்த 6 குழந்தைகளில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் 4 பேர் இறந்தனர்.

மற்றவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்