உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமாதகல் பகுதியில் மீனவர்களின் மூன்று படகுகள் நேற்று சனிக்கிழமை அதிகாலை விஷமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாதகல் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு படகுகளும், கடலில் நின்ற மற்றொரு படகும் இவ்வாறு தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளது.

இதில் படகு மற்றும் அவைகளிலிருந்த பெறுமதியான வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அடங்கலாக 25 லட்சம் ரூபா பெறுமதியானவை எரிந்து நாசமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்