உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledடென்மார்க் எஸ்ப்ஜெர்க் நகரிலிருந்து லண்டன் ஹாரிச் துறைமுகத்திற்கு சுமார் 500 பயணிகளுடன் சைரெனா சீவேய்ஸ் என்ற உள் நாட்டு போக்குவரத்து கப்பல் ஒன்று நேற்று சென்றது.
23,000 டன் எடைகொண்ட அந்த உள்நாட்டு கப்பல் துறைமுக வளாகத்தில் நிறுத்துவதற்கு வந்தபோது துறைமுக சுவரின் மீது மோதியது.

இதனால் கப்பலின் அடியில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புக ஆரம்பித்தது. உடனடியாக வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் கப்பலின் உள்ளே சென்று தண்ணீர் புகுவதை தடுத்து ஓட்டையை அடைத்தனர்.

இதனால் பயணிகள் அனைவரும் கப்பலை விட்டு கீழே இறங்க முடியாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர் இதில் யாரும் சிக்கிக்கொள்ளாமல், பத்திரமாக பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காற்று பலமாக வீசியதால் இந்த விபத்து நடந்தா என விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்