உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesஇறால் பஜ்ஜி

இறால் மசாலா செய்ய :

பெரிய இறால் – 15

மிளகாய்த் தூள் – கால் மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – அரை மேசைக்கரண்டி

தயிர் – ஒரு மேசைக்கரண்டி

கரம் மசாலா – அரை மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

பஜ்ஜி மாவிற்கு:

கடலை மாவு – 5 மேசைக்கரண்டி

அரிசி மாவு – ஒரு மேசைக்கரண்டி

சமையல் சோடா – ஒரு சிட்டிகை

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

மிளகாய்த் தூள் – கால் மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு

ஒரு சட்டிலியில் இறால் மசாலா செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிது நீர் விட்டு, மசாலா அனைத்தும் இறாலுடன் ஒன்றாக சேர்ந்து திரண்டு வரும் வரை அடுப்பில் வைத்து பின் அடுப்பை அணைத்து விடவும். மாவிலும் உப்பு சேர்ப்பதால் மசாலாவிற்கு உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும்.

பஜ்ஜி மாவு தயாரிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

ஒரு சட்டிலியில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் இறாலை ஒவ்வொன்றாக எடுத்து பஜ்ஜி மாவில் தொட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான இறால் பஜ்ஜி தயார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்