உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கடந்த சில வாரங்களாக மத்திய யூலன்ட் பகுதியில் திருடர்களின் கைவரிசை அளவுக்கு மீறிச் சென்றுள்ளது.

தமிழர்களின் வீடுகள் தினசரி உடைத்து நகைகள், பணம், உண்டியல்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடுவது வன்முறையாக உயர்ந்தும் சென்றது.

நகைகளை பறி கொடுத்த எவரும் அவற்றை திருப்பிப் பெற்றதாக இதுவரை யாதொரு தகவல்களும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சென்ற வாரம் வெளியான செய்திகள் வீடுடைப்புக்களில் ஈடுபட்ட பல கிழக்கு ஐரோப்பிய திருடர்கள் மடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தன, ஆனாலும் தொலைந்த நகைகள் கிடைத்தாக இல்லை.

இந்தநிலையில் இந்தக் களவுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது..?

போலீசாருடன் பொது மக்கள் எவ்வாறு தொடர்பாடல்களை ஏற்படுத்துவது..?

அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய பணிகள் யாவை..?

என்பன தொடர்பாக மத்திய யூலன்ட் போலீசாருடன் தமிழ் மக்கள் சந்தித்து உரையாடும் நிகழ்வொன்று எதிர்வரும் 05.07.2013 வெள்ளி மாலை Kl. 17.00, மணிக்கு Dansk Metal, Neksø vej – 7, 7400 Herning என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட கூட்டத்தை ஐரோப்பிய தமிழர் கலாச்சார சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது, ஆர்வமுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் இவர்கள் அழைத்துள்ளனர்.

மேலதிக விபரங்கள் பெற வேண்டுமானால் தொலைபேசி : 52673156

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்