Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesCA03XNQYஅரசமைப்பின் “13’ஆவது திருத்தச் சட்ட விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு முயற்சிப்பதைக் கடுமையாக எதிர்க்கும் இவ்விரு கட்களும் இந்தச் சந்திப்பின்போது அது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடின.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மு.காவின் சார்பில் அதன் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் எம்.ரி. ஹஸனலி எம்.பி. மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காதிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

அதேவேளை, இந்தத் தெரிவுக்குழுவில் தனது பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்க்காது அரசு அதைப் புறக்கணித்துள்ளது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற கூட்டமைப்பு மு.கா. சந்திப்பின்போது தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்காதமைக்கான காரணங்கள் குறித்து சம்பந்தன் எம்.பி., மு.காவிடம் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஜனாதிபதி தம்மைப் பழிவாங்கிவிட்டார் எனவும், எனினும், 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு எடுக்கும் நடவடிக்கைளைத் தாம் கடுமையாகத் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் இந்தச் சந்திப்பின்போது மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது 13ஆவது திருத்தச் சட்டத்தில் அரசு திருத்தங்களைக் கொண்டுவந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள் குறித்தும் இரு கட்சிகளும் ஆராய்ந்தன

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்