உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பிரபல வர்த்தகர் ஒருவர் கல்குடா பகுதியில் உள்ள கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு தினங்களாக காணாமல்போன வர்த்தகரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் குளிர்பான முகவராக செயற்படும் செல்லையா மனோகரன் (52வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த இரண்டு தினங்களாக காணாமல்போனமை தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த வர்த்தகரின் மோட்டார் சைக்கிளும் கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் கூறினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்