உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வடமாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நாளை 15ம் திகதி அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றையதினம்(13) நடைபெறவிருந்த அக் கட்சியின் விசேட கூட்டம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளர் என குறிப்பிட்டுள்ளனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவையே அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கருத்துத்தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்