உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்டென்மார்க்கின் அடுத்த ஆண்டுக்கான மோசமான மீதம் பிடித்தலில் ஓரங்கமாக ஓகூஸ் நகரசபை 710 பேருக்கு வேலை நீக்கக் கடிதங்களை வழங்கவுள்ளது. வரும் 2011 – 2014ற்கு இடையில் 341 மில்லியன் குறோணர்களை மீதம் பிடிக்க வேண்டிய அவலமான நிலை இருப்பதால் இந்த மீதம் பிடித்தல் கத்தி விழுகிறது. நகரசபையின் துப்பரவு தொழில் பரந்துபட்டு ஒன்றிணைக்கப்படுகின்றன. முதியோர் இல்லம், பாடசாலைகள், பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்ப்போம் என்கிறார் நகர முதல்வர். இதுபோன்ற செய்திகள் மற்றைய நகரங்களிலும் நீண்டு செல்லும் என்றே தெரிகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதைவிட மேலும் அதிகமாக மீதம் பிடிக்க வேண்டியிருப்பதாக நேற்று முன்தினம் தொலைக்காட்சி செய்திகள் கமுக்கமாக வாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மீதம் பிடித்தல் தொகையை பிரித்து பிரித்து அறிவிப்பதை அவதானிக்க முடிகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்