உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார வழிகாட்டலுக்கு அமைவாக பிரிட்டனும் பாரிய மீதம் பிடித்தல் கொள்கைகளை அமல் செய்வதற்கான பிரேரணைகளை இன்று பாராளுமன்று கொண்டு வருகிறது. பிரிட்டனின் பொதுத்துறைக்கு ஒதுக்கப்படும் பணத்தில் சுமார் 19 வீதமான மீதம் பிடித்தல் அமலாகவிருக்கிறது. இதில் முக்கியமான விடயம் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதிக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதுதான். இதன் காரணமாக வெளிநாட்டு மாணவர்கள் மேலும் பெரும் சுமையை சுமக்க வேண்டிய அவலம் வருமென எதிர் பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனிடம் கேட்டுள்ள மீதம் பிடிக்கும் தொகைக்கும் இப்போது பிரிட்டன் மீதம் பிடிப்பதாக அறிவிக்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் தெரிகிறது. ஆகவே பிரிட்டனின் இந்த மீதம் பிடித்தல் மேலும் உக்கிரமடைய வாய்ப்புள்ளது. பிரிட்டனின் பொதுத்துறையில் வரப்போகும் வெட்டு மேலும் நான்கு வருடங்களுக்கு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். இப்போது ஐரோப்பாவில் வீசும் பொருளாதாரப் புயல் பிரிட்டனுக்குள் நுழைகிறது, பலரால் இதன் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் போகலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்