உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



kanakaபிரபல நடிகை கனகா சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளாவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 40.

முன்னாள் நடிகை தேவிகாவின் மகளான கனகா, 1989-ம் ஆண்டு ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஓடி கனகாவை திரையுலகின் உச்சானி கொம்புக்கு கொண்டு சென்றது. இதனால் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் அவருக்கு வாய்ப்பு குவிந்தது.

தமிழில் ரஜினி, பிரபு, கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் நடித்ததுபோல், மலையாளத்திலும் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என பிரபல முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் எந்நேரமும் பிசியாக இருந்த நடிகை கனகா 90-களின் இறுதியில் திடீரென காணாமல் போனார். திருமணம் செய்து கொள்ளாத இவர் தன்னுடைய தாயின் அரவணைப்பிலேயே இருந்து வந்தார். கடந்த 2000-ஆம் ஆண்டு அவரது தாயாரும் இறந்துவிட கனகா தனிமரம் ஆனார்.

சமீபத்தில், மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில் உள்ள புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு நடிகை கனகா சிகிச்சை பெறுவதை பார்த்த பிறகுதான், கனகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது.

சினிமாவில் பணமும், புகழும் சம்பாதித்தவர், காந்த கண் அழகால் ரசிகர்களை கட்டிப் போட்ட கனகாவின் மரணம் அவரது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்