உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்மும்பையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற இலங்கையர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இந்திய போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் 2006 ஜனவரி 25ம் திகதி சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்த போது சிவானந்தன் என்பவர் தனது சூட்கேசில் 2.7 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிவானந்தத்துடன் சேர்த்து சுந்தர், வசந்தராஜா, சிவராஜ், காளி மற்றும் நாதன் ஆகியோரும் போதைப் பொருள் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் எனவும், இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் பொலிஸாருக்கு தெரியவந்தது.

இந்த ஆறு பேரில், சுந்தர், காளி, நாதன் ஆகியோர் தலைமறைவாகினர்.

சிவானந்தன், வசந்தராஜா மற்றும் சிவராஜ் ஆகிய மூவர் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருந்தமை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி வி.ராமமூர்த்தி விசாரித்து வந்தார்.

வழக்கின் இறுதி விசாரணையில் வசந்தராஜா மற்றும் சிவராஜ் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

சிவானந்தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்