உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கி புதிய பிரதேச சபை ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஆகிய இருவரினாலும் கூட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவிலுள்ள தமிழ் முஸ்லிம் கிராமங்களான ஐய்யங்கேணி முஸ்லிம் கிராமம், ஐய்யங்கேணி தமிழ் கிராமம், மிச்சி நகர், தாமரைக்கேணி, ஹிஸ்புல்லா நகர், மீராகேணி, சதாம் ஹுஸைன் கிராமம், முஹாஜிரீன் கிராமம், தளவாய், புண்ணக்குடா, சவுக்கடி, குடியிருப்பு உட்பட இன்னும் சில கிராமங்களை உள்ளடக்கி இந்த புதிய பிரதேச சபையை அமைக்குமாறு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் சுமார் 6,500 தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் உள்ளனர். இக்குடும்பங்களை உள்ளடக்கியதான இந்த புதிய பிரதேச சபையை உருவாக்குமாறு அக்கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்