உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledயாழ். பல்கலைக்கழகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர்கள் அறுவருக்கு பல்கலைக்கழகத்திற்கான இரண்டு வருட வகுப்புத் தடையினை யாழ். பல்கலைக்கழகம் விதித்துள்ளது.

கடந்த 31ம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கும், நான்காம் வருட மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட போது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 31ம் திகதி முதல் இரண்டு வருட மாணவர்களையும் நேற்று முன்தினம் புதன்கிழமை வரையிலான 14 நாட்கள் பல்கலைக்கழத்திற்கான அனுமதியினை மறுத்திருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கான அனுமதியினை யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், கைகலப்பில் சம்பந்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் அறுவருக்கான பல்கலைக்கழக அனுமதியினை இரண்டு வருடத்திற்கு மறுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்