உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்col(1)கொழும்பு மாநகர சபையின் முக்கிய ஆவணங்கள் சில தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. மாநகர சபையின் 6 ஆயிரம் பைல்கள் பொரளை கனத்தை பொது மயானத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக முறையான விரிவான விசாரணை நடத்துமாறு மாநகர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குரிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களே இவ்வாறு தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபையிலிருந்து திருடப்பட்டுள்ள இந்தஆவணங்கள், அங்கிருந்து பொரளை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவரே இந்த ஆவணங்கள் தீக்கிரை சம்பவத்துடன் தொடர்புடையவரென மேற்படி மாநகர சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்