தமிழில் எழுத
பிரிவுகள்


ஜெயம் ரவி, த்‌ரிஷா நடிக்கும் பூலோகம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது.

பூலோகம் படம் வடசென்னை பின்னணியில் தயாராகியிருக்கும் படம். வடசென்னையில் உண்மையிலேயே வாழ்ந்த பாக்ஸர் ஒருவ‌ரின் கதை என்கிறார்கள். ஜெயம் ரவி பாக்ஸர் வேடத்தில் நடிக்க, த்‌ரிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பூலோகத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக பிரபல ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸை இறக்குமதி செய்தார்கள். ஏழடி உயர நரனிடம்தான் நம்ம நாயகன் கிளைமாக்ஸில் மோதியிருக்கிறார். படத்தின் இன்னொரு அம்சம், மயானக்கொள்ளை காட்சியில் சாமி வந்தவராக ஜெயம் ரவி நடித்திருப்பது.

அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படம் இன்று சென்னையில் நிறைவுபெற்றது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க ஆஸ்கர் பிலிம்ஸ் படத்தை தயா‌ரித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்