உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் முக்கிய போதைப் பொருள் விற்பனையார்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

84 லட்சம் ரூபா பெறுமதியான 1.3 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக கண்காணிக்கப்பட்டு இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை கொழும்பு கல்கிஸ்சை பகுதியில் 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் கொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுதலையானவர் என பொலிஸார் கூறினர்.

கார் ஒன்றில் போதைப் பொருளை எடுத்துச் சென்ற போதே இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்