உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


robbery2மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில் சேர்மன் வீதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸில் வீட்டு உரிமையாளர் நேற்று சனிக்கிழமை இரவு முறைப்பாடு செய்துள்ளார்

இவ்வீட்டின் உரிமையாளர்கள், அவர்களின் உறவினரொருவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மீண்டும் தங்களது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் காணப்பட்டதுடன், வீட்டு அறையிலுள்ள அலுமாரியிலிருந்து 3 பவுண் தங்கநகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்