உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


valikaamaam_01-440x250எங்கள் வீடுகள் எப்போது விடுவிக்கப்படும்’ என்று வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் ஏக்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இராணுவத்தினர் தாம் தங்கியிருந்த வீடுகளை வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் கடந்த சில நாள்களாகத் தடல்புடலாக இடம்பெற்று வருகின்றன. வடமாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்தும் இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் வேகமாக இடம்பெறுகின்றன.

இவ்வாறு நகரப் பகுதியிலுள்ள இராணுவ முகாம்களைவிட்டு வெளியேறும் படையினர், வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைக்கப்பட்டுவரும் நிரந்தர இராணுவ முகாம்களில் குடியேறி வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 23 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள், தங்கள் வீடுகளைப் படையினர் எப்போது விடுவிப்பர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

எதுவித அடிப்படை வசதிகளும் உரிய வகையில் கிடைக்காமல் 23 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் தாம் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடும் அந்த மக்கள், தம்மைச் சொந்த நிலத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

நகரப் பகுதியில் வீடுகளை விடுவிக்கும் படையினர், வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகளையும் விடுவிக்கலாம் தானே என்று கூறியுள்ள அந்த மக்கள், நகரப் பகுதியிலிருந்து வெளியேறும் இராணுவத்தினர் வலி.வடக்குப் பகுதியில் நிரந்தர இராணுவ முகாம்களை அமைப்பது தமது இடங்கள் நிரந்தரமாகப் பறிபோகுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும் குறிப்பட்டுள்ளனர்.

வலி.வடக்கில் விடுவிக்கப்படாத 24 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் மீளக்குடியமர்வதற்காக 7 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரம் பேர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவுகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்