உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்கள் ஜவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஹஸனலி தெரிவித்தார்.நேற்று முன் தினம் இரவு முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கட்சியின் தலைமைபீடமான தாருஸ்ஸலாமில் ஒன்று கூடியது.

அண்மையில் கட்சியிலிருந்து பிரிந்து மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் கட்சி வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரை கடந்த மாதம் கட்சி இடைநீக்கம் செய்தது.

அவர்களே நேற்று முன் தினம் உயர் பீட உறுப்பினர்களின் சம்மதத்துடன் நீக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாண சபைத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மில்ஹான், அனிஸ்தீன், முனாஜித், நஜாத் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் அரசாங்க கட்சியில் போட்டியிடும் ஹெயியா ஆப்தீன் ஆகியோரே இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஹஸனலி எம்.பி. தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்