உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledசீனாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 3 பேர் பலியாகியுள்ளனர், பலர் காயமடைந்தனர்.
சீனாவின் தென் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவான இந்நிலநடுக்கம், டிகுன், லியாயோ வென்சாய் உள்ளிட்ட நகரங்களில் கடுமையாக உணரப்பட்டது.

அத்துடன் ஷங்ரி – லா என்ற கிராமத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் தொலைத் ‌தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 52,000 பேர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்