உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சுவீடனில் கடந்த சனியன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின் விபரங்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கை சேர்ந்த இவருடைய பெயர் தைமூர் அப்டுல்வகாப் அல் அடாலி என்பதாகும். 1992 ல் சுவீடன் வந்த இவருக்கு 2004ல் திருமணம் நடைபெற்றது. 29 வயதுடைய இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு. இன்னொரு திருமணம் முடிக்கவுள்ளதாகவும் பேஸ்புக்கில் எழுதியுள்ளார். சுவீடனில் வாழும் காலத்தில் அயலில் உள்ளவர்கள் இவரை மிகவும் அமைதியான மனிதராக அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் பின்னர் சிலகாலம் இவர் வடக்கு இங்கிலாந்தில் வாழ்ந்துள்ளார். அத்தருணமே தீவிவாதப் பாதைக்குள் தன்னை நுழைத்துள்ளார் என்றும் சுவீடிஸ் போலீசார் கூறுகிறார்கள்.

சனிக்கிழமை பி.ப. 17.00 மணிக்கு ஸ்ரொக்கோமின் இதயப்பகுதியில் இரண்டு குண்டுகள் வெடித்தன. அதற்கு 10 நிமிடங்களின் முன்னர் ஓர் அநாமதேய மின்னஞ்சல் சுவீடிஸ் சாபோ செய்திப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதில் சொற்ப நேரத்தில் உங்கள் குடும்பங்கள், பிள்ளைகள் மரணிக்கப் போகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சலில் சுவீடனில் முகமது கேலிச்சித்திரத்தை வரைந்த லாஸ் வில்க்ஸ் என்ற ஓவியரின் பெயரும் இருந்தது. அதேவேளை ஜேர்மனிய ஸ்பீகல் இணையத்தளம் இவர் ஓர் இளம் ஈராக்கியர் என்று தெரிவித்து, ஆப்கான், ஈராக் போர்களுக்கு எதிரானவர் என்றும் தெரிவித்தது. இவருக்கு பல பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புண்டு என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் இருவர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் ஸ்கன்டிநேவிய நாடுகளில் பலத்த அதிர்வலைகளை உண்டு பண்ணியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்