உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Bharathi Mottoமகாகவி பாரதியை, தமிழ் உலகம் எளிதில் அவ்வளவு சீ்க்கிரத்தில் மறந்துவிட முடியாது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என இவரது படைப்புகள் எண்ணிலடங்கா. தனது தாய்மொழி மீது கொண்டுள்ள பற்றினையும் காதலையும் மிக அழகாக தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்தியவர் பாரதியார். இவர் நம்மை விட்டு நீங்கி 92 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த வேளையில் அவரை பற்றி சில விடயங்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.
இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை தன்னகத்தே கொண்டவர்.கவிதை எழுதுபவன் கவிஞனாகிறான். ஆனால் அதற்கும் மேலாக கவிதையையே தனது வாழ்க்கையாகவும் முழு மூச்சாகவும் கொண்டு வாழ்ந்தவர் தான் மகாகவி பாரதியார் என்றால் மிகையாகாது.
இவரது கவித்திறனை கண்டு வியந்த மதுரை எட்டப்ப நாயக்க மன்னர் எட்டயபுர அரசசபையின் முன்நிலையில் “சுப்புரமணியாக” இருந்த நமது கவிஞருக்கு பாரதி என பட்டமளித்து மகிழ்ந்தார். அன்று முதல் சுப்புரமணியாக இருந்தவர் பாரதி என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார் தமிழ் மீதும் தாய்நாட்டின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட பாரதி தாய்நாட்டிற்காகவும், தமிழிற்காகவும் தனது வாழ்க்கையை அற்பணித்துள்ளார். பல மொழிகளை கற்று அறிந்த இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என பெருமையுடன் மார்தட்டி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார், டிசம்பர் 11ம் திகதி1882ம் ஆண்டு பிறந்த இவர் செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு காலமானார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்