உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்uno003நவநீதம்பிள்ளை அம்மையாரின் வாய் மூல அறிக்கை சமர்ப்பிக்கபபடுவதற்கு முன்னர் உரையைத் தாங்கிய பிரதிகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. ஐநாவின் மனித உரிமைகள் உதவி ஆணையாளரினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.

இதில் தான் இலங்கை சென்று வந்த நிலையில் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் கையாண்ட முறை மிகவும் வருத்தமளிப்பதாகவும், தாம் சென்றிருந்த வேளை வெளிநாடுகளுக்கு காட்டுவதற்காக இராணுவக் குறைப்பு செய்ததுடன் வட-கிழக்கை விட்டு தாம் அகன்றதும் இராணுவம் மீண்டும் சென்றதை சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

சர்வதேச சமூகத்திற்கு பிரதான கடமை உண்டு சுயாதீன விசாரணை வேண்டும்.

இலங்கையில் சுயாதீனமான பொலிஸ்துறை இல்லை, தொடர்ந்தும் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் நிலை

காணி பறிக்கப்பட்டதற்கு நஸ்டஈடு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது

காணாமல் போனவர்கள் வட-கிழக்கில் மட்டும் தான் ஆய்வு வெளி மாவட்டங்களுக்கு இல்லை,

ஐநா காணாமல் போனேர் அமைப்பு இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும்,

2008–2012 வரை பாதுகாப்புத் தடைச் சட்டத்தில் 50 போர் வரை கைது,

மீள் குடியேற்றம் திருப்தியில்லை, 2008 க்கு முன்னர் இடம் பெயர்ந்தவர்கள் இன்னமும் அகதிகளாக,

திருமலை மாணவர் படுகொலை மற்றும் பிரான்ஸ் தொண்டு நிறுவன படுகொலைக்கு தீர்வில்லை,

சரணடைந்த விடுதலைப்புலிகள் 11758 நபர்கள் விடுதலையானதாகவும் 234 பேர் புனர்வாழ்வு, 98 பேருக்கு எதிராக வழக்கு,

வெலிகடை, வவுனியா மற்றும் இன்னும் பல படுகொலைகளுக்கு விசாரணை இல்லை, வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும்,

பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்கள் மீது அடக்கு முறை,

என இன்னும் பல விடயங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது

இவைகள் பிரதான விடயமாக பார்க்கப்படுகிறது.

இவ் அறிக்கை வருவதனை அறிந்து கொண்ட இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகளின் பிரசன்னம் மிக மிக குறைவாக உள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வழமையான பாணியில் நவிபிள்ளையின் அறிக்கையினை நிராகரித்ததுடன், நாட்டில் இராணுவம் எந்தக் குற்றமும் செய்யவில்லை நாம் ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்பதற்கு வடமாகாண சபை தேர்தல் சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறி அறிக்கையின் விடங்களை நியாயப்படுத்தி செல்ல முற்பட்ட வேளை சபைக்கு தலைமை தாங்கியவரால் உரை இடைநிறுத்தப்பட்டது. மேலும் உரையாற்ற முற்பட்ட வேளை அனுமதி மறுக்கப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்