உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடைப்பட்ட ஆழ்கடல் பரப்பில் தத்தளித்த படகிலிருந்து பாதுகாப்பாக மீட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு அப் படகிலிருந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 70 இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இவர்கள் கற்பிட்டி பிரதேசத்திலிருந்து கடந்த 26 ஆம் திகதி வெளிநாட்டுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். நடுக்கடலில் செல்லும் போது அது இயந்திரக் கோளாறானதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். மீட்கப்பட்ட படகினையும் கரையை நோக்கி கொண்டு வந்த கடற்படையினர் மீட்கப்பட்டவர்களையும் காலி கடற்படை முகாமுக்கு நேற்று மாலை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்த படகில் பயணித்தவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கும் கடற்படை அவர்களை விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்