உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணத்தில் பொலிஸ் வாகனமொன்றின் மீது கற்கள் மற்றும் வேறு பொருட்களினால் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எனினும், தாக்குதல் சம்பவத்தினால் பொலிஸ் வாகனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கரம் விளையாடிக் கொண்டிருந்த போது மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்