Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கடந்த 18 வருடங்களாக சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படுகின்றார். இவர் 1992 ஆம் ஆண்டு சுவிஸ் வந்து இருக்கின்றார்.

அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். இரு வருடங்களின் பின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆயினும் இவரை அப்போது நாடு கடத்த முடியவில்லை. இவர் 1996 ஆம் ஆண்டு சுவிஸ் பெண் ஒருவரை திருமணம் செய்தார்.

இதனால் இவருக்கு வதிவிட விசா அனுமதி காலக்கிரமத்தில் கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு சுவிஸ் பெண்ணை விவாகரத்து செய்து கொண்டார். இலங்கையில் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்தார்.

இவருக்கு இத்தமிழ் பெண் மூலம் ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளனர். இம்மூவரும் சுவிஸ் வந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தார். ஆனால் சுவிஸ் அதிகாரிகள் இவ்விண்ணப்பத்தை 2008 ஆம் ஆண்டு நிராகரித்தனர்.

அத்துடன் இவருக்கு வழங்கி இருந்த விசா அனுமதியையும் ரத்துச் செய்தனர். ஏனெனில் இவர் இலங்கையில் உள்ள தமிழ் பெண்ணுடன் ஆன உறவு குறித்தும் இரு குழந்தைகள் குறித்தும் முன்பு சொல்லாமல் மறைத்து இருக்கின்றார் என்று அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர்.

இவர் வதிவிட அனுமதி மறுப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். ஆயினும் இவரது வழக்கு நடவடிக்கை தோல்வியில் முடிந்து உள்ளது. இவர் கட்டாயம் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்